செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்தவர், தற்போது ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு விரும்புகிறார் 

 சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் - Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின்

முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக சென்ற மாதம் செய்திகள் வெளிவந்தன. இப்போது அவர் நேர...டியாக சுவிட்சர்லாந்து அரச தொலை காட்சியில் தோன்றி, தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.


இஸ்லாத்தை ஏற்றமைக்கான காரணத்தை இவர் இப்படி குறிப்பிடுகின்றார்... ''Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,'' - நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இவரை பற்றி சுவிட்சர்லாந்து அரசு தொலை காட்சி இவரைப்பற்றி கூறும்போது; ''He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur'an, prays five times a day and goes to a mosque!'' - இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்பவராகவும், பைபிளை படிப்பவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர், சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார், ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார், அல் குர்ஆன் படிக்கிறார்'' என்று குறிப்பிடுகிறது.

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டு மென்றும், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்திய இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது. ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 3,11,000 என்று கூறுகின்றது.

இங்கு 100 க்கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருக்கின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடை செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.


.................................................................................

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்... 01



முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.

மேற்கொண்டு பதிவிற்கு...

முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.

இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.



ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்ககூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.


இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் "மொரிஸ்கோஸ்" (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள், சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும், ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.

ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு, முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டு, முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.



கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம்  மேற்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator).

கொலம்பஸ், தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.

உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும், அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். கொலம்பஸ்சும், தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால், ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?

கொலம்பஸ், மூன்று கப்பல்களுடன் (The Pinta, The Nina and The Santa Maria)  தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர், அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் "பின்சோன் சகோதரர்கள்" (The Pinson or Pinzone brothers), அவர்களில்

1. மார்டின் பின்சோன் (Martin Pinzone), தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
2. தேசெண்டே பின்சோன் (Thesentae Pinzone), தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (Francisco Pinzone), தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.

இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Pedar Alonso Niño).கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.

ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில்  மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.

1492 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (The Bahamas) பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ், அங்கு வசித்தவர்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தார்.


சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில், ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ், மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.



இண்டீஸ் என்பது செல்வ செழிப்புள்ள பகுதியாக அறியப்பட்டிருந்தது. இந்த இண்டீஸ் என்பது தற்போதைய ஆசிய நிலப்பரப்பு. ஆக அவர் ஆசியாவின் செல்வ செழிப்பை அடைவதற்காகதான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை அடைந்ததும் அதை இண்டீசென நினைத்து விட்டார்.

இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தது,இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும், அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.

ஆக, அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டு, ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், கொலம்பஸ்சுடன் பயணம் மேற்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (Triana) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.

இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும். அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 


அதற்கு அடுத்த வருடம், 1493 இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.

இம்முறை அவர் இறங்கியது ப்புர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன... காலனி ஆதிக்கந்தான்.  ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.

அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து மக்கள் அடிமைகளாகவும், துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால், ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30% பேர் நன்கு படித்தவர்கள், இஸ்லாமிய வல்லுனர்கள்.    



ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.

இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது, மறுக்க முடியாதது.

அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஆக,     

    அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
    பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
    அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள்  (1776-1789).
    அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812). 
    அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).


இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல "முஸ்லிம் லடினோஸ்" (Muslim Latinos) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.   

ஆக, பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.

கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி, கொலம்பஸ்சுக்கு முன்னர்?

இது மாபெரும் ஆச்சர்யம், ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர், கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர், அங்கே வாழ்ந்துள்ளனர்.

கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?

இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.
         
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

நம் எல்லோருக்கும் இறைவன் நல்வழி நல்குவானாக...ஆமின்...

References:
1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick
4. History of United States - endotwikipediadotorg
5. Islamic Spain - British Broadcasting Service (BBC)
6. Isabella I of castile - endotwikipediadotorg.
7. Histroy of Puerto Rico - welcomedotopuertoricodotorg
8. Christopher columbus ships - elizabethan-eradotorgdotuk

My sincere thanks to
1. Br.Eddie of thedeenshowdotcom

உங்கள் சகோதரன்...
ஆஷிக் அஹ்மத் அ    


அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்... 02
அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)...

அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு பிந்தைய முஸ்லிம்களின் வரலாற்றை சென்ற பதிவில் பார்த்தோம்..

இன்ஷா அல்லாஹ், கொலம்பஸ்சுக்கு முந்தைய வரலாற்றை இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்...

கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகள் (சுமார் 600 ஆண்டுகளுக்கு) முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்க பகுதிகளை அடைந்திருக்கின்றனர்.

வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களின்படி நமக்கு கிடைக்கக்கூடிய முதல் தகவல்,

1. க்ஹஷ்க்ஹஷ் இப்ன் சையித் இப்ன் அஸ்வாத் அல் குர்துபி (khash khash ibn said ibn aswad al-qurtuby) என்பவர் தன் ஆட்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் (Muslim Andalusia, the current spain) உள்ள பலோஸ் (Port Palos) துறைமுகத்தில் இருந்து மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டு, இன்றைக்கு கரீபிய தீவுகள் இருக்கக்கூடிய நிலப்பகுதியை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர் "தெரியாத நிலம்" (The Unknown Land). அதுமட்டுமல்லாமல், தான் சென்ற வழியை வைத்து ஒரு வரைப்படத்தையும் தயாரித்து கொண்டார். அங்கிருந்து வரும்போது ஸ்பெயினிற்கு பெரும் பொருள்களையும் கொண்டு வந்தார். இது அப்போதைய ஸ்பெயின் மக்கள் மிக நன்றாக அறிந்த செய்தி.

ஆக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிற தகவலின்படி அமெரிக்க பகுதிகளை முஸ்லிம்கள் முதன்முதலில் அடைந்தது 889 இல்.



2. அதன்பிறகு பிப்ரவரி 999 இல், முஸ்லிம் அண்டளுசியாவின் கிரனடா பகுதியை சேர்ந்த இப்ன் பாரூக் (ibn Farukh) என்பவர் தற்போதைய ஸ்பெயினில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து அட்லாண்டிக் கடலை கடந்து இரண்டு தீவுகளை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர்கள், காப்ரரியா (Capraria) மற்றும் ப்ளுஈடினா (Pluitina) என்பதாகும். அதே ஆண்டு மே மாதம் அவர் ஸ்பெயின் திரும்பினார்.

3. பனிரெண்டாம் நூற்றாண்டின்   முற்பகுதியில், வரலாற்றில் மிக மிக பிரபலமான அல்-இத்ரீசி (Al-Idrisi) என்பவர், எட்டு நபர்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் இருந்து மேற்கில் பயணம் செய்து கரீபிய தீவுக்கூட்டங்களை அடைந்தார். அங்கு இந்தியன்ஸ்சிடம் (பூர்வீக குடிமக்கள்) மாட்டிக்கொண்டனர்.



இங்கு சிறிது நேரம் நிறுத்தி, அல்-இத்ரீசி என்பவர் யார் என்று பார்ப்பது மிக அவசியம். இவர் ஒரு மிகச்சிறந்த கடல்வழி ஆராச்சியாளர், பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொண்டவர். சிசிலி (இந்த சிசிலி இத்தாலியில் உள்ளது, தன்னாட்சி அதிகாரம் பெற்றது, மத்திய தரைக்கடலில் மிகப்பெரிய தீவு இதுதான்) அரசருக்கு ஆலோசகராகவும் இருந்தவர். இவர் வரைந்த உலகவரைப்படத்தை தான் கொலம்பஸ் தன் பயணத்தில் பயன்படுத்தினார்.

பதிவிற்கு செல்வோம், மேற்கிந்திய தீவுக்கூட்டங்களில் இந்தியன்ஸ்சிடம் இவரும் இவரது ஆட்களும் மாட்டிக்கொண்டனர். அப்போது இவர்களுக்கும் இந்தியன்ஸ்களுக்கும் இடையே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தது ஒரு இந்தியன்.

என்ன? ஒரு இந்தியன் இவ்விருவருக்கும் மொழிப்பெயர்ப்பாளராக இருந்தாரா?, அதாவது ஒரு இந்தியனுக்கு அரபி தெரிந்திருந்ததா? அரபி கற்றுக்கொள்ளும் அளவிற்கிற்கு அவருக்கு முஸ்லிம்களுடன் தொடர்பிருந்ததா?  ஆம் உண்மைதான். அவர்தான் அல்-இத்ரீசிகும் அவரது ஆட்களுக்கு விடுதலை வாங்கித்கொடுத்தார். இது மிக தெளிவாகவே வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆக நாம் மேலே கண்ட மூன்று பயணங்களும் முஸ்லிம் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டவை.

இதன்பிறகு நமக்கு கிடைக்கக்கூடிய தகவல், 1291 இல் மொரோக்கோவில் இருந்து ஷேக் ஜைனடீன் அலி மேற்கில் அட்லாண்டிக் கடலை கடந்து "புது உலகை" அடைந்தார் என்பது. புது உலகா? இப்படிதான் வரலாறு அந்த நிலங்களை குறிப்பிடுகின்றது. 

இதெல்லாம் விட சுவாரசியமான தகவல், மாலி (Mali, a muslim country situated in north africa) நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பாகும். மாலியின் மேன்டிங்கோ (Mandingo) அரசின் மன்னரான அபு-புகாரி (Abu-Bhukari), 1310 இல் இரண்டு படைகளை சுமார் 2200 கப்பல்களுடன் மேற்குலகில் புதிய நிலங்களை கண்டுபிடிக்க அனுப்பினார். இவர்களும் தற்போதைய அமெரிக்க நிலத்திற்கு வந்து சேர்ந்தனர்.


இன்றளவும் தெற்கு அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகள் (southern american Indian tribe) இந்த மேன்டிங்கோ வடிவங்களை (Mandingo idiograms) கொண்டு   எழுதுகின்றனர். அதுபோல வட அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகளும் மேன்டே மொழியின்  (மேடிங்கோக்களின் மொழி) வார்த்தைகளை பயன்படுத்துக்கின்றனர். ஆக மாலியில் இருந்து வந்த முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்த மக்களுடன் தங்கிவிட்டனர். அந்த புது நிலங்களில தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டனர்.

ஆக கொலம்பஸ் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அங்கு வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் வரைப்படத்தை (Map) 1513 இல் வரைந்தவர் துருக்கியின் பிரி முஹீத் டின் ரீஸ் (Piri Muhyid Din Re'is), துருக்கி கடற்படையின் தளபதியாக இருந்தவர். கடல் வழி ஆராச்சியாளரும் கூட.  அவர் வரைந்து துருக்கி சுல்தான் செலீம் I (Selim I) னிடம் சமர்ப்பித்து விட்டார். கொலம்பஸ் அப்போது அமெரிக்காவிற்கு வந்து விட்ட போதும், அந்த வரைப்படத்தில் இருந்த அமெரிக்க பகுதிகள் கொலம்பஸ்சினால் கண்டுபிடிக்க படாதவை. மிக தெளிவாகவே அவை வரையப்பட்டிருந்தன. ஆக அந்த தளபதிக்கு அமெரிக்காவின் நிலப்பரப்பை பற்றிய தெளிவான பார்வை இருந்திருக்கிறது.                          இது வியப்பான தகவல்...

இன்னும் பல ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம், பதிவின் நீளம் கருதி அவை விடப்படுகின்றன.
ஆக கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்களுடனான அமெரிக்க தொடர்பு மறுக்கமுடியாதது.ஆனால் இந்த தகவல்களெல்லாம் சிறிது காலத்திற்கு முன் வரை வெளிவரவில்லை.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக கூறப்படும் ஒரு காரணம், இந்த தகவல்கள் பெரும்பாலும் அரபி மொழியில் இருந்ததுதான் (மேடிங்கோவை தவிர்த்து).     

எவ்வளவு நாள் தான் உண்மை மறைந்திருக்கும்? கடந்த சிலபல வருடங்களாக இந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

அல்லாஹ் அமெரிக்கர்களை கொண்டே இந்த உண்மையை வெளிக்கொண்டுவந்துவிட்டான். ஆம் இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவர்கள் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்கர்கள்.

அதில் ஒருவர் அரேபிய குதிரைகளை பற்றி ஆராய அரபி கற்று, பின்னர் அந்த அரபி அறிவை வைத்து குரானை கற்க, வியந்து போய் முஸ்லிமாக மாறியவர். பின்னர் தன் அரபி அறிவை கொண்டு பழங்கால அரபி நூல்களை புரட்ட வியப்பின் மேல் வியப்பு. முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்துவிட்டார்.

Dr.ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald F.Dirks) தான் அவர். இவரைப்போன்றவர்கள் வெளிக்கொண்டுவந்த உண்மைகள் யாராலும் மறுக்கமுடியாதவை.   

ஆக அல்லாஹ் அமெரிக்கர்களை வைத்தே உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்...

அமெரிக்காவின் வரலாற்று செய்திகளை மாற்றப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. இன்ஷா அல்லாஹ்..மாற்றப்படும்... 

அதெல்லாம் சரி, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக படித்திருக்கிறோமே?இதற்கு முன் பத்தியை மறுபடியும் படித்துக்கொள்ள வேண்டியதுதான்...  

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick
4. More about Al-idrisi - clarklabsdotorg
5. Muslims discovered America long before Columbus - Mathaba news agency.

My Sincere thanks to:
1. Br.Eddie of thedeenshowdotcom

 உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ  

நன்றி: http://www.onlinerys.tk

.                                                                               

 

மதுரையில் தாயீக்கள் தர்பியா, இந்தியா முழுவதிலும் இருந்து 300க்கும் அதிகமான தாயீக்கள் பங்கேற்பு!

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சத்தியத்தியக் கொள்கையை நோக்கி அணி அணியாய் அலை அலையாய் மக்கள் படையெடுத்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்..
இந்த சத்தியக் கொள்கையை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்., கணக்கு வழக்குகளிலும், சறுக்காத கொள்கையிலும் மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றதன் காரணமாக கடந்த ரமலான் மாதத்தில் வேறு எந்த அமைப்புகளும் செய்திட முடியாத ஒரு சாதனையை இறைவனின் கிருபையால் செய்து காட்டியது. அதாவது கடந்த ரமலான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பித்ரா தொகையை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடமிருந்து திரட்டி அதை உரியவர்களிடம் சேர்ப்பித்தது.. அல்ஹமதுலில்லாஹ்.
எவ்வித இம்மை இலாபமும் இன்றி மறுமை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஒரு சகோதரன் கூட தவறான கொள்கையில் இருக்கும் வரை இந்த ஜமாஅத்தின் பணிகள் ஓய்ந்து விடாது என்ற நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு .., திருக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மட்டுமே சரியான வழிமுறை என்ற சத்தியக் கொள்கையில் இன்று வரை சறுக்கிவிடாத இந்த ஜமாஅத்தின் கிளைகள் ஊர்கள் தோறும் நாளுக்கு நாள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றது.
ஆனால் கிளைகள் உருவாகும் அளவிற்கு சத்தியத்தை எடுத்துச் செல்லும் பிரச்சாரகர்கள் (தாயீக்கள்) பற்றாக்குறை ஆகிக்கொண்டே வந்தது. வார வெள்ளிக்கிழமைகளில் நபி வழியின் அடிப்படையில் ஜூமுஆ தொழுகை, நாள் தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் பெண்கள், ஆண்கள் பயான் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், தர்பியாக்கள், மாற்று மத சகோதரர்களிடம் தாவா நிகழ்ச்சிகள் என இந்த ஜமாஅத்தின் பணிகள் அதிகமாகிக்கொண்டே செல்வதைக் கருத்தில் கொண்டு புதிய தாயீக்களை உருவாக்கும் பல முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

அதன் ஒரு முயற்சியாக இன்று (19/11/2011) மற்றும் நாளை (20/11/2011) ஆகிய இரு தினங்களில் இந்தியா முழுவதிலும் இருந்து தவ்ஹீத் தாயீக்களை வரவழைத்து அவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமை மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மதுரை மாநகரில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்தியா முழுவதும் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இருக்கும் தவ்ஹீத் பிரச்சார சகோதரர்களுக்கு இந்த முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 300க்கும் அதிகமான தவ்ஹீத் பிரச்சார தாயீக்கள் இன்று காலை முதல் மதுரையில் குவியத் துவங்கினர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் KV துரையப்ப நாடார் தேனம்மை மஹாலில் காலை 8 மணி முதலே தாயீக்கள் குவியத்துவங்கினர். ஏற்கனவே பெயர் கொடுத்திருந்தவர்கள் அங்கிருந்த பட்டியலில் தங்களின் பெயர்களுக்கெதிரே கையொப்பமிட்டு பதிவு செய்து தங்கள் இருக்கைகளில்அமர்ந்தனர்.

இறைவனின் மாபெரும் கிருபையால் சரியாக காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கமாக இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் அப்துந்நாசிர் “உளத்தூய்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து மாநிலத் தலைவர் சகோ.பீ.ஜைனுல் ஆபீதின் “பேச்சுக்கலை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையில் தாயீக்களின் பேச்சு எப்படி இருக்க வேண்டும், மக்களைக் கவரும் விதமாக பேசுவது எப்படி, மக்களை வெறுப்புக்குள்ளாக்கும் பேச்சுக்களைத் தவிர்ப்பது எப்படி போன்ற நுனுக்கங்களை பேச்சாளர்களுக்கு விளக்கினார்.

அதைத் தொடந்து சேலம் தவ்ஹீத் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.சுலைமான் “பலகீனமான மற்றும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய செய்திகள்” என்ற தலைப்பில் தன் உரையைத் துவக்கினார்.

இதில் தவ்ஹீத் தாயீக்கள் எந்தச் செய்திகளை ஆதாரமில்லை என மறுக்கிறார்கள், அதே செய்தியை எதன் அடிப்படையில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் ஆதாரங்களோடு விளக்கினார்.
அடுத்ததாக மாநில தனிக்கை குழு உறுப்பினர் தஃபீக் அவர்கள்  “டிரஸ்ட் சங்கம் வேறுபாடு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

DSC07131
DSC07132
பொது இயக்கத்தையும் பொதுமக்களின் நிதியில் இருந்து வாங்கப்படும் சொத்துக்களையும் டிரஸ்ட் ஆக பதிவு செய்தால் அது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மட்டுமே சேரும், அதேபோல அந்தச் சொத்தினைச் சங்கமாகப் பதிவு செய்தால் அது அனைத்து மக்களுக்கும் பொதுவான சொத்து ஆகிவிடும் என்பதையும், டிரஸ்டிற்கான அதிகாரம் மற்றும் சங்கத்திற்கான அதிகாரம் போன்றவைகள் குறித்தும் தெளிவாக விளக்கினார்.


சரியாக 1 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்து லுஹர் தொழுகை மற்றும் மதிய உணவிற்கான இடைவேளை விடப்பட்டது.
தொழுகைக்குப் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு சுவையான உணவுகள் வழங்கப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4.30 வரை தாயீக்களிடம் குறை கேட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரச்சாரகர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த குறை கேட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் அதன்பிறகு மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ் .சுலைமான் “ஒற்றுமை கோசம்” என்ற தலைப்பிலும், மாநிலச் செயலாளர் அம்பத்தூர் யூசுப் “தாயீக்களுக்கான ஒழுங்குகள்” என்ற தலைப்பிலும், மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி “ சஹாபாக்களைப் பின்பற்றுதல் – எதிர் கேள்விகளும் பதில்களும்” என்ற தலைப்பிலும், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் “ஆன்லைன் பீஜே இணையத்தளம் ஒரு பார்வை” என்ற தலைப்பிலும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி “தவ்ஹீத் ஜமாஅத்தின் நாம் ஏன் இருக்க வேண்டும்” என்ற தலைப்பிலும் உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

 

__________________________________________________________

 மாநிலத்தலைமையகம் நடத்தும் பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

News Source: tntj.net

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்களுக்கான இரண்டுநாள் சிறப்பு பயிற்சி முகாமை நமது மாநிலத்தலைமையகம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நவம்பர் 19 மற்றும் 20 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் மதுரையில் நடத்தவுள்ளது.

இந்த இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாமில் பேச்சாளர்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சிகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.

குறிப்பு:
· மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யும் பேச்சாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

· பேச்சாளர்கள் முன்கூட்டியே தங்களது பெயரை மாவட்ட நிர்வாகிகளிடம் பதிவு செய்து மாநிலத்தலைமையகம் வழியாக நுழைவு அனுமதிச்சீட்டை பெற வேண்டும்.

· பேச்சாளர்கள் அனைவருக்கும் போக்குவரத்து தொகையை தலைமையகமே வழங்கும்.

· இரண்டு நாட்கள் முழுமையாக ஒதுக்கி நாம் ஏற்பாடுசெய்துள்ள மண்டபத்தில் தங்க வேண்டும்.

· அந்த இரண்டுநாளும் மாணவர்கள் போலத்தான் பேச்சாளர்கள் நடத்தப்படுவார்கள்.

· குர்-ஆன் ஹதீஸ் ஆய்வுகள், விவாதங்கள் போன்றவற்றில் ஈடுபடும் முதல் நிலை பேச்சாளர்களுக்கு இதில் அனுமதி இல்லை
எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயிற்சி முகாமில் அனைத்து மாவட்ட அளவிலான பேச்சாளர்களும் கலந்துகொள்ள இப்போதே தயாராகும்படி கேட்டுக்கொள்கின்றோம். ரயில் மார்க்கமாக வரக்கூடியவர்கள் இப்போதே முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு : 9952035333

 

__________________________________________________________

 முதியோர் இல்ல மூதாட்டி மரணம் : அடக்க மறுத்த ஊர் ஜமாஅத் ! ”யாவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே!”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய நலப்பணிகளில் மிக முக்கியமானது ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகும். தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப் போலக் கருதி தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை நாமெல்லாம் கண்டிருப்போம். சாப்பிடக் கூட வழியில்லாத அந்த முதியவர்கள் குப்பைத் தொட்டிகளில் விழும் எச்சில் இலைகளைத் திண்பதையும் நாம் கண்டிருப்போம்.
பெற்றோர்களை அதிகம் பேண வேண்டும் என்றும் வழியுறுத்தும் நம் இஸ்லாமிய மார்க்கத்திலும் இது போன்ற சிலரால் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நாதியற்று ஒதுங்கி வெயிலிலும் மழையும் கிடந்து அவதிப்பட்டு அசையக் கூட முடியாமல் கிடந்து அங்கேயே அநாதைகளாய் இறந்து போகும் முதியவர்களையும் நாம் கண்டிருப்போம்.
சில சமூக ஆர்வலர்கள் இது போன்ற முதியவர்களைக் கூட்டிச்சென்று மற்ற மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அனாதை இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். காலம் முழுவதும் ஈமானோடு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாய் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்கள், இறுதிக் காலத்தில் வேறு வழியில்லாமல் உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் மாற்று மதக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு இணைவைப்பில் விழுந்து விடுகின்றனர். அவர்களின் வணக்கங்கள் முழுமையாக நாசமாகி அவர்கள் நரகப்படுகுழிகளை நோக்கி பயணிப்பதற்கு நாமும் ஒரு வகையில் காரணமாகி விடுகின்றோம்.
இந்தநிலை இனி யாருக்கும் வந்துவிடக் கூடாது., நம் மக்கள் இனி அநாதைகளாக நடுவீதியில் செத்து விழக்கூடாது, உணவிற்காக கொள்கைகளை கொள்கை மாற்றிக் கொள்ளக்கூடாது என்ற தீர்மானத்தை அழுத்தமாகப் பதிந்து தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லம் துவக்கப்பட்டது. இறைவனின் பேரருளாலும் நம் சகோதரர்களின் பூரண ஒத்துழைப்பாலும் இந்த இல்லம் இப்போது தஞ்சை மாவட்டம் ராஜகிரி பண்டாரவாடையில் இயங்கி வருகின்றது. இப்போதைக்கு அங்கே 19 முதியவர்கள் தங்கியிருக்கிறார்கள். (அந்த இல்லம் நடக்கும் இடம் கூட நம் ஜமாஅத்தின் சேவைகளைக் கண்டு ஒரு சகோதரர் அன்பளிப்பாகத் தந்தது ஆகும்.)

இந்த நிலையில் கடந்த 12/09/2011 திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் அங்கே தங்கியிருந்த சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சபியா பீவி என்பவர் மவுத்தானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த மூதாட்டி கடந்த பல மாதங்களாக இந்த இல்லத்தில் தான் தங்கியிருந்தார். இவர் அசைந்து எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்தார். நம் சகோதரர்கள், அந்த மூதாட்டியைக் கருனையோடு கவனித்து வந்தனர். இவர் மவுத்தானதும் இவருக்குச் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்து, குளிப்பாட்டி, கபனுடை தரித்து தயார்படுத்தினார்கள். அந்த இல்லத்தில் உள்ள அனைத்து முதியவர்களும் இரவெல்லாம் விழித்திருந்து அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.

இரவு நேரம் என்பதால் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அனைவரும் இருந்து விட்டனர்.

காலையில் பண்டாரவாடை பெரிய பள்ளிக்கு ஃபஜ்ரு தொழுகைக்குச் சென்ற நம் சகோதரர்கள் அந்த ஊர் நிர்வாகிகளிடம் மூதாட்டி வபாத்தான விசயத்தைச் சொல்லி அவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி தருமாறு கேட்டனர். இது சம்பந்தமாக நாங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்., எனவே காலை 8 மணிக்கு நாங்களே தகவல் அனுப்புகிறோம் எனச் சொல்லி நம் மக்களை அனுப்பி வைத்தனர் பண்டாரவாடை ஊர் நிர்வாகிகள்.
காலை மணி 9 ஆகியும் கூட எவ்வித தகவலும் வராத காரணத்தால் நேரடியாகச் சென்று கேட்டு விடுவது என முடிவுசெய்து அவர்களை அணுகிய போது அவர்கள் சொன்ன பதில் நம் மக்களுக்கு நெஞ்சை அடைப்பதாக இருந்தது., எந்த ஊரென்றே தெரியாதவருக்கெல்லாம்  எங்கள் ஊரில் அடக்கம் செய்ய இடம் தர முடியாது. நீங்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கு என்ன முடியுமோ அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என வெடித்தனர்.

ஜனாஸாவைச் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இருந்த நம் சகோதரர்கள் அவர்களிடம், ஜனாஸைத் தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதற்கும் மனமிறங்காத அந்த கல் நெஞ்சம் கொண்டவர்கள், “முடியவே முடியாது நீங்கள் இங்கிருந்து இடத்தைக் காலி செய்யுங்கள், உங்களுக்கென்று தனிப்பள்ளிவாசல் இருக்கும் போது அடக்கத்தலத்திற்கு மட்டும் ஏன் எங்களை நாடி வருகிறீர்கள்? அதையும் நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியது தானே” என தங்களின் காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்த்தனர்.

அதற்கும் கோபப்படாத நம் மக்கள் மிகத் தெளிவாக சொன்ன பதில், “எங்கள் கொள்கையை எதிர்ப்பதற்காக எங்களின் பெற்றோர்கள் இறந்து போனால் அவர்களின் ஜனாஸாவைத் தான் தடுக்கிறீர்கள், ஆனால் இப்போது இறந்து போயிருப்பது எங்கள் பெற்றோர் அல்லவே! இங்கிருக்கும் யாருடைய பெற்றோரும் அல்லவே. அனாதைகளாய் வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு மூதாட்டியின் ஜனாஸாவுக்குத் தானே நாங்கள் உங்களிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகளால் வீட்டைவிட்டு துரத்தப்பட்டு மனம் நொந்து போய் தங்கள் கடைசி வாழ்க்கையை வாழ்ந்து இறந்து போன அவர்களின் ஜனாஸாவையாவது நிம்மதியாகப் போக விடுங்கள். உங்கள் மையவாடியில் ஆறு அடி நிலம் தந்து விடுவதால் உங்களுக்கு ஒன்றும் குறைந்து போய்விடாது என்று மீண்டும் கேட்டுப் பார்த்தனர்.

எதற்கும் இறங்காத மனம், ஜனாஸாவைப் பார்த்தாவது இறங்கும் என்பார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ஒரு அனாதை மூதாட்டியின் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் முரண்டு பிடித்து நின்றனர் பண்டாரவாடை ஜமாஅத்தார்கள்.
இனி இதற்கு மேலும் இங்கே நின்றால் வேலைக்காகாது என்று ராஜகிரி பண்டாரவாரை கிளை நிர்வாகிகள், உடனடியாக தலைமையகத்தைத் தொடர்பு கொண்டனர். தகவல்களை முழுமையாகக் கேட்டறிந்து விட்டு ஜனாஸாவின் அடக்கமே முக்கியம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த மாநிலத் தலைமை, இறந்தவர் நம்முடைய கொள்கைச் சகோதரர்கள் என்றால் கடைசி வரை போராடிப் பார்க்கலாம். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் நம்மிடம் அடைக்கலம் நாடி வந்தவர்களின் ஜனாஸாவை வைத்து பிரச்சனையாக்க வேண்டாம் வேறு ஏதாவது ஊரில் முயற்சி செய்து பாருங்கள் என்று அவர்களை அறிவுறுத்தியது. மாவட்ட நிர்வாகிகளுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

தஞ்சை வடக்கு  மாவட்டத்தின் தலைவர் இம்தியாஸ் தன் சொந்த ஊரான திருமங்கலக்குடியை அடுத்த குறிச்சிமலை ஜமாஅத்தார்களை அனுகினார். இந்த விசயத்தைக் கேட்டதும் அந்த ஊர் நாட்டாமை ஹபீப் முஹம்மது அவர்களும் மற்றும் நிர்வாகிகள் இன்ஜினியர் ஜாபர், ஹாஜா மற்றும் ஜாபர் ஆகியோரும் எவ்வித ஆட்சேபனையும் இன்றி உடனடியாக ஜனாஸாவை இங்கே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என தெரிவித்ததைத் தொடர்ந்து ,  தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக இந்தத் தகவலை பண்டாரவாடை கிளைக்குத் தெரிவித்தனர்.

இறைவனின் உதவி அறியாப்புறத்தில் இருந்து வரும் என்ற இறை வசனத்திற்கேற்ப எவ்வித இடையூறும் இன்றி, ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு அனுமதி தந்த அந்த ஊர் ஜமாஅத் நிர்வாகிகளுக்காக நம் மக்கள் துவா செய்தனர்.

உடனடியாக காலை 10.45 மணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த மூதாட்டியின் ஜனாஸாவை ஏற்றிச் சென்று சரியாக 11.30 மணிக்கு குறிச்சிமலை சென்றடைந்தனர். அதே பள்ளிவாசலில் நபிவழிப்படி நம் சகோதரர்கள் அந்த ஜனாஸாவிற்குத் தொழுகை நடத்தி அந்த மூதாட்டிக்காக தங்கள் கைகளால் குழி வெட்டி கடைசிவரை உடனிருந்து ஜனாஸாவை அடக்கம் செய்து முடித்தனர். சரியாக 12.40 மணியளவில் அந்த மூதாட்டியின் நல்லடக்கம் முடிந்தது.
ஜனாஸாவை அடக்க செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் எவ்வித தயக்கமும் காட்டாமல் உடனடியாக அனுமதி தந்த குறிச்சிமலை ஜமாஅத்தார்களுக்கு நம் மக்கள் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர். அந்த மக்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!

எதையும் பார்க்காமல் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதி தந்த இவர்கள் எங்கே, ஆதரவற்ற ஜனாஸாவை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த அவர்கள் எங்கே! அனைவரும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன் கடுமையாக தண்டிக்கக் கூடியவன்.

எந்த நிர்வாகிகள் ஆதரவற்ற ஒரு மூதாட்டியின் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் மறுத்தார்களோ, இறைவன் நாடினால் அவர்களுக்கும் கூட நாளைக்கு அந்த நிலை ஏற்படலாம். அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகளைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 3:185


பண்டாரவாடையைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் ஊர் நிர்வாகிகளாக காட்டுமிராண்டிகளையும் மனித மிருகங்களையும் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், மனிதாபிமானம் கூட இல்லாத இந்தக் கொடியவர்களை தக்க முரையில் தட்டிக் கேட்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

News from: http://www.tntj.net/
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, September 13, 2011, 21:19
______________________________________________________________________________

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு?

சட்டமன்றத் தேர்தல் மாநில நிர்வாகத்தை தேர்ந்திருப்பதற்கு நடத்தப்படுவதால் மாநில அளவில் முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மையைக் கவனத்தில் கொண்டு ஒரு அணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது.


அது போல் நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டு மொத்த இந்தியாவை ஆளக்கூடியவர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுவதால் இந்திய அளவிலோ, மாநில அளவிலோ முஸ்லிம் சமுதாய நலன் சம்மந்தப்பட்ட கோரிக்கை அடிப்படையில் ஒரு அணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது...

ஆனால் உள்ளாட்சி அமைப்பு என்பது உள்ளூர் நிர்வாகம் சம்மந்தப்பட்டதாகும். இந்த தேர்தலில் அனைத்து முஸ்லிம்களுக்குமான பொதுவான கோரிக்கை எதையும் வைக்க முடியாது என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் நிலைபாட்டையே இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடர்கின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம்.

கொடி, பெயரைப் பயன்படுத்தக் கூடாது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எந்த நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். உறுப்பினர்கள் கட்சி சாராமல் தனித்து போடியிடலாம். ஆனால் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத ஜமாத் பிரச்சாரம் செய்யாது.

எனவே தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பெயரையோ, கொடிகளையே எந்த வேட்பாளர்களும் பயன்படுத்த வேண்டாம் என்றும், மாவட்ட, கிளை நிர்வாகிகள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரச்சாரம், மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மாநில தலைமை கேட்டுகொள்கின்றது.

பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்


இப்படிக்கு,
ஆர்.ரஹ்மத்துல்லா
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பொள்ளாச்சி டவுன் திடல் தொழுகை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்



ஜகாத் விநியோகம்

 மருத்துவ உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை ஜகாத் நிதி விநியோகம் நடைபெற்றது. இதன் ஒரு  பகுதியாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சகோதரர்  ஒருவருக்கு  மருத்துவ செலவிற்காக  ரூபாய் 10,000 (பத்தாயிரம்)  29/08/2011  திங்கள்கிழமை அன்று நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.




___________________________________________________________________

2. கிட்னி செயல்பாடு குறைப்பாட்டால் டயாலிசிஸ் செய்துவரும் சகோதரர் ஒருவருக்கு   மருத்துவ  செலவிற்காக  ரூபாய் 10,000  ( பத்தாயிரம் )  29/08/2011 திங்கள்கிழமை அன்று நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.


____________________________________________________________________________


3. மருத்துவ செலவிற்காக சகோதரி ஒருவருக்கு ரூபாய் 5,000 (ஐந்தாயிரம்) 29/08/2011 திங்கள்கிழமை அன்று நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.


__________________________________________________________________
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை சார்பாக வசூலிக்கப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து 4200  ரூபாயை கடந்த 28 /08 /2011 ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஏழை  குடும்பத்திற்கு  வட்டி கடனை மீட்பதற்காக  கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.




__________________________________________________________________________

பொள்ளாச்சி கிளையில்
பெருநாள் திடல் அறிவிக்கும் விதமாக பொள்ளாச்சி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது


__________________________________________________________________________



பொள்ளாச்சி கிளையில்
'இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்'





கடந்த 19 ந்தேதி ஆகஸ்ட் 2011 ல் பொள்ளாச்சி சுலேசுவரன்பட்டி கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு 'இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்' நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!  
__________________________________________________________________________

சகோதரர் அல்தாபி பொள்ளாச்சி வருகை!

பொள்ளாச்சி டவுன் கிளைக்காக பள்ளிவாசல் கட்டுவதற்கு இடம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.  அந்த இடத்தை பார்வையிட தமிழ் நாடு தவுஹீத் ஜமாஅத் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கடந்த  10 ந்தேதி ஆகஸ்ட் 2011, புதன்கிழமை வருகை தந்து இடத்தை பார்வையிட்டார்கள்.  

____________________________________________________________________________


பொள்ளாச்சியில் பெண்கள் பயான்!




தமிழ் நாடு தவிஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை பெண்களுக்கான பிரத்யேக பயான் நிகழ்ச்சியை கடந்த ஜுன் மாதம் 6 ந்தேதி ஏற்பாடு செய்திருந்தது. இதில் சகோதரி சமீமா அவர்கள் கலந்து கொண்டு 'ஐந்து  கடமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் சுமார் ஐம்பது பெண்கள் கலந்து கொண்டு  பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ். 
__________________________________________________________________________


பொள்ளாச்சி கிளையில் பயான்!


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளையின் சார்பாக  கடந்த 4 ஆம் தேதி ஜுன் மாதம் 2011 ல் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரர் ரஷீத் அவர்கள் கலந்து கொண்டு மார்க்க உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்! 

__________________________________________________________________________