தனியார் பள்ளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம்

அஸ்ஸலாமு அழைக்கும்..

 27/06/2013 அன்று 

பள்ளி மாணவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துறைத்த  பொள்ளாச்சி கிளை. ( கோவை மாவட்டம்).
 
நமது சகோதரர் ஒருவரின் மூலமாக பொள்ளாச்சி யில் உள்ள புகழ் பெற்ற தனியார் (SANTHI SCHOOL  )பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு
 இஸ்லாத்தை அதன்  தூயவடிவில் எடுத்துசொல்ல ஓர் அறிய வாய்ப்பு  வந்தது.இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்ததிக்கொள்ள கிளை நிர்வாகம் முடிவு செய்து அதன் வேலைகளை முழு வீச்சில் துவங்கியது .உடனடியாக மாவட்டத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றதுடன் ,மாநில பேச்சாளர் சகோ.சல்மான் நிகழ்ச்சி யை நடத்தித்தர அழைப்பு கொடுக்கபட்டது..மேலும் நிகழ்ச்சியை மெருகேற்ற நம் சகோதரர்கள் உதவியுடன் கணினி மூலம் இஸ்லாம் சம்பத்தப்பட்ட பவர் பாயிண்ட் பிரசண்டேசன் தயாரிக்கப்பட்டது.இதில் இஸ்லாம் ஓர் அறிமுகம், முஸ்லீம் என்பவர்கள் யார்?,இஸ்லாத்தின் அடிப்படை ?,அல்லாஹ்  என்பவன் யார் ?முஹம்மது என்பவர் யார் ?இஸ்லாமிய கடமைகள் என்ன ?இஸ்லாத்திற்கும் மற்ற மார்ககங்களுக்கும்  உள்ள வித்தியாசம் என்ன ?இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்,இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகள் ,திருக்குர்ஆன்  இறைவேதமே ,மற்றும் இஸ்லாம் சம்பத்தப்பட்ட வரலாற்று புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.காலை சரியாக  11 மணிக்கு மாநில பேச்சாளர்,மற்றும் கிளை நிர்வாகிகளும் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை  சந்தித்து நிகழ்ச்சி ஆரம்பமானது .முதலில் ஸலாமுடன் அதற்குரிய விளக்கத்துடன் தனது உரையை துவக்கினார்..அங்குள்ள பெரிய திறையில் பிரசண்டேசன் ஒளிபரப்பபட்டது..சகோ .சல்மான் அவர்கள் மாணவர்களுக்கு ஏற்றார்போல்  எளிமையாகவும் ,தெளிவாக புறியும் படியும் ,உதாரணத்துடன் இஸ்லாத்தை எடுதுரைத்தார் .இதில் அல்லாஹ் என்பதன் இலக்கணம் என்ன ?நபிகள் நாயகம் எவ்வாறு வேறு தலைவர் களுடன் ஒப்பிடுகையில் தனித்து விளங்குகின்றார் ,அவர் செய்த  புரட்சிகள் என்ன ?அவருடைய வாழ்கை முறை எப்படி இருந்தது ,என்று சுட்டி கட்ட பட்டது.திருமறை குர் ஆன் பற்றி  தெளிவாகவும் முழுமையாகவும் விளக்கப்பட்டது.மறுமை நாளை குறித்து இஸ்லாம் என்ன சொல்கின்றது என்பதையும் விளக்கப்பட்டது..இறுதியில் இஸ்லாம் கூறும் சமத்துவத்தை பற்றி எடுத்துஉரைக்கப்பட்டது  .மாணவர்களுக்கு கேள்வி பதில் நேரம் கொடுக்கப்பட்டு கேட்டகேள்விகளுக்கு சகோ.சல்மான் அவர்கள் உரிய பதிலை அளித்தார்கள் ....நிகழ்ச்சி  சுவாரசியத்தை அறிந்த ஒருங்கிணைப்பாளர் மேலும் அரைமணி  நேரம் அதிகபடுத்தி தந்தார்..இறுதியில் கேள்வி கேட்ட மாணவர்களுக்கு  ஆங்கில பிரதி மாமனிதர் நபிகள் நாயகம்  வழங்கப்பட்டது..மேலும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ,தலைமை ஆசிரியர்  இருவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம்,  மற்றும் ஆங்கில பிரதி மாமனிதர் நபிகள் நாயகம் வழங்கப்பட்டது..தௌஹீத் ஜமாஅத்தின்  அரும்பணிகள் பற்றி தெளிவாக சொல்லபட்டது..அன்று மாலை  ஒருங்கிணைப்பு செய்தவர்  நிர்வாகிகளை  போனில் அழைத்து நிகழ்ச்சி மிக சிறப்பாகவும் நன்றாகவும் மாணவர்கள் விரும்புகின்ற வகையிலும் இருந்தது..என்று கூறி நன்றியை தெரிவித்து கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.