பொள்ளாச்சி டவுன் கிளையில் கடந்த 7-12-12 வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை ஆரம்பம் அல்ஹம்துலில்லாஹ் !
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு என்று பொள்ளாச்சி டவுன் மற்றும் சூளேசுவரன்பட்டி என்று இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன, இவற்றில் சூலேசுவரன்பட்டில்யில் மட்டும் மதரசதுத் தவ்ஹீத் என்ற பெயரில் பள்ளிவாசல் கட்டப்பட்டு ஜும்மா மற்றும் அனைத்து தொழுகைகளும் நடைபெற்று வைகின்றது.
பொள்ளாச்சி நகரில் வசிக்கும் தவ்ஹீத் சகோதர சகோதரிகள் நபி வழி ஜும்மா தொழுகைக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருந்தது. இதனால் சில நேரங்களில் பள்ளிக்கு வர முடியாத நிலை கூட இருந்து வந்தது. அந்த நிலையை போக்க பொள்ளாச்சி நகருக்குள் தவ்ஹீத் ஜமாத்திற்காக பள்ளி வாசல் கட்ட வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக கொள்கை வாதிகள் மத்தியில் இருந்து வந்தது.
கொள்கைச் சகோதரர்கள் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருந்ததால் பள்ளி வாசல் கட்ட பணம் திரட்டுவதில் சிக்கல் நீடித்து வந்தது. தமிழ் நாட்டில் வசிக்கும் தவ்ஹீத் சகோதரர்களிடம் நிதி திரட்ட முடிவுசெய்யப்பட்டு , தலைமையின் வழிகாட்டுதலோடு சிறிது சிறிதாக திரட்டும் நிலை ஏற்பட்டது.
2 வருடங்களுக்கு முன்னாள் நம் வலைத்தளத்தில் வெளியிட்ட விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
TNTJ இணையதளத்தில் வந்த பொள்ளாச்சி டவுன் மர்கஸ் கட்ட நிதி திரட்டிய சில செய்திகளுக்கு இங்கே 1 2 3 கிளிக் செய்யவும்
பள்ளிவாசல் கட்டுவதற்கு போதுமான நிதி வராத நிலையில், நாட்களும் நீண்டு கொண்டு போவதால் வாங்கிய இடத்தில் தற்காலிகமாக இரும்பு தகடினால் ஆன கூரை வேயப்பட்டு, ஆண்களுக்கும், பெண்களுக்கும் தோழ இட வசதி செய்யப்பட்டதை தொடர்ந்துடிசம்பர் மாதம் 7ம் நாள் 2012ம் வருடம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ.
அனைத்தையும் சிறப்பாக செயல்பட வைத்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
மாநில பேச்சாளர் சகோதரர். முஹம்மது தாஹா அவர்கள் கலந்து கொண்டு 'தனிப்பள்ளியின் தேவை ' என்ற தலைப்பில் ஜும்மா உரையாற்றினார்கள். திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.