நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதும் அமெரிக்காவை எதிர்த்து போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வன்னம் இருக்கிறது.
இந்தியாவில் தமிழகத்திலும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தப்போவதை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக அந்ததந்த மாவட்டங்களின் தலைமை மூலம் மாவட்ட தலைநகரங்களிலும், மற்றும் நகரங்களிலும் நடந்து வருகின்றது.
நேற்று (14.09.12) கோவை மாவட்டம் சார்பாக கோவையில் பிரமாண்டமான முறையில் போராட்டம் நடந்தேறியது. இன்று(15.09.12) காலை சென்னையில் நடந்த போராட்டத்தால் சென்னை ஸ்தம்பித்து போனதை யாவரும் அறிவோம்
பொறுமையிழந்த பொள்ளாச்சி இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள பசுமையை மட்டுமே பக்கங்களாக கொண்ட பொள்ளாச்சி யும், அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்ததை இன்று ( 15.09.12) தன் வரலாற்று பக்கங்களில் பதிவு செய்தது.எம் உயிரினும் மேலான எங்கள் நாயகத்தை இழிவாக படப்படுத்தி காட்டிய இழிவின் கழிவான இஸ்ரேலிய இயகுனரையும், அதை உலகுக்கு காட்ட துணை புரிந்த அந்த கழிவில் உருவான அழுக்கு புழுவான அமெரிக்க பாதிரியையும், அதற்கு இடம் கொடுத்த அயோக்கிய அமெரிக்க அரசையும் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , பொள்ளாச்சி கிளை அறிவித்தது.
பொள்ளாச்சி கிளையைச் சேர்ந்த சமுதாய மக்கள் மட்டுமின்றி, சுலேசுவரன்பட்டி, உடுமலை மற்றும் ஆனமலை கிளைகளை சேர்ந்த சமுதாய சொந்தங்கள், கண்மணி நாயகத்தின் கண்ணியம் காக்க வீறு கொண்டு எழுந்து கொபக்கனைகளோடு, கொடியவர்களின் மீது கொசங்ககளாய் பொழிய வீரத்தோடு பெண்களோடு குழந்தைகளும் கலந்து கொண்டு வரலாற்று பக்கங்களில் வரிகளாய் விற்றிருந்தனர். மாவட்ட தாயி சகோதரர் ஜாகிர் அவர்களின் கண்டன உரையை பதிவு செய்தார்.இன்று பொறுமையிழந்த பொள்ளாச்சி திடல் கோபத் 'தீ' க்கடலாக மாறியிருந்தது இந்தப்பகுதி மக்கள் மறக்க மாட்டார்கள்.
மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு இப்போராட்டம் நடந்தாலும் திரளான மக்கள் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வீரியமிக்க போராட்ட களமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.




