கல்வி வழிகாட்டி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி மற்றும் சூலேஸ்வரன்பட்டி கிளை மாணவர் அணி  சார்பாக 12.08.12 அன்று பொள்ளாசியில் கிளை தலைவர் சகோ. பிர்தவ்ஸ் தலைமையில்  “கல்வி வழிகாட்டி முகாம்” நடைபெற்றது இதில் இஸ்லாமிய மாணவ - மாணவியர்களுக்கு ப்ரீ மெட்ரிக் (PRE MATRIC), போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC), மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS) என்ற கல்வி உதவி தொகைக்கான விண்ணப்படிவங்கள் பூர்த்தி செய்து தரப்பட்டது மற்றும் BANK ACCOUNT இல்லாத மாணவர்களுக்கு இந்த முகாமின் மூலம் ஒரு தனியார் வங்கியின் உதவியுடன் புதிதாக ACCOUNT Open செய்து தரப்பட்டது.இந்த முகாமின் மூலம் கிட்டதட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியினர் பயன் பெற்றனர். இதில் கிளை நிர்வாகிகள்,கோவை  மாவட்ட மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கிளை மாணவர் அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.