இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்

கோவை மாவட்டம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொள்ளாச்சி கிளை முலமாக வருடா வருடம் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகின்றது. இந்த வருடமும் இலவச கண் பரிசோதனை மாற்றம் சிகிச்சை முகாம் நடத்த நிர்வாகிகளால் முடிவெடுக்கப்பட்டு வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து  நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு 26 ந்தேதி நடத்த முடிவானது. 
இதைத்தொடர்ந்து பல்வேறு விளம்பர மீடியாக்கள் மூலம் மக்களிடம் இதைப்பற்றிய அறிவிப்பு செய்யப்பட்டது, நம் கொள்கைச்சகொதரர்கள் மகத்தான உழைப்பால், நகரின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த அறிவுப்பு கொண்டு செல்லப்பட்டது. 

கடந்த 26 ந்தேதி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகசிறப்பான முறையில் கண் பரிசோதனை முகாம் நடந்து முடிந்தது. அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் சுமார் 200 பேர் வரை  கலந்து கொண்டு  பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.