உதவிகள்

கல்வி உதவி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி 22/12/2011,
பொள்ளாச்சியில் நம் சமுதாயத்தைச சேர்ந்த ஷமீமா என்ற கல்லுரி மாணவி தன்னுடைய செமஸ்டர் பீஸ் கட்ட பணமில்லாமல் தன்னுடைய கல்லுரி படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இவர்கள் பொள்ளாச்சி கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தங்கள் நிலை தெரிவித்ததை தொடர்ந்து, கிளை நிர்வாகிகளால் அந்த மாணவியின் செமஸ்டர் பீஸ் கட்ட முடிவெடுக்கப்பட்டு, அந்த மாணவியின் குடும்பத்தாரிடம் ருபாய் (3000) மூவாயிரத்தை வழங்கப்பட்டது.



மருத்துவ உதவி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - 23/12/2011,
பொள்ளாச்சியில் நம் சமுதாயத்தை சேர்ந்த சிக்கந்தர் என்ற சகோதரர் கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ளதால், தனக்கு  மருத்துவ  உதவி வேண்டி கிளை நிர்வாகிகளை நாடினார். அவருக்கு மருத்துவ உதவியாக ருபாய் (Rs.1350/-) ஆயிரத்து முன்னுற்றி ஐம்பது கடந்த டிசம்பர் மாதம் 23 ந்தேதி நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.