நவ , 2011:  கடந்த 06.11.2011 அன்று துல்ஹஜ் பிறை 09 - அரஃபா நாள் என்றும், 07.11.2011 அன்று துல்ஹஜ் பிறை 10 - ஹஜ் பெருநாள் என்றும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.அதனடிப்படையில், 07.11.2011 திங்கட்கிழமையன்று காலை ஹஜ் பெருநாள்என்று அறிவிக்கப்பட்டது. 


பொள்ளாச்சியில் எப்பொழுதும் போல், இந்த வருடமும் இரண்டு இடங்களில் நபிவழியில் திடல் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது . 1 . சுலேசுவரன்பட்டியில் மதரசத்துத்  தவ்ஹீத் மார்கஸ் அருகில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. 2. பொள்ளாச்சியில் திருநீலகண்டர் விதியில் PKD மில்லின் பின் புறம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை மக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு பொள்ளாச்சி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. 

மற்றும் இதன் தொடர்சியாக மக்களிடம் நபி வழியில் குர்பானி கொடுப்பதை கொண்டு செல்லும் பொருட்டு 04/11/2011 அன்று 'குர்பானியின் சட்டங்கள்' பற்றி  நோட்டீஸ் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டு நகரின் எல்லா பள்ளிவாசல்களிலும் ஜும்மாக்கு பின் நம் கொள்கைச் சகோதரர்களால் விநியோகிகபட்டது. 
                                                                                                                                           நோட்டீஸ் விநியோகம்



திடல் தொழுகை

அறிவித்தபடி ஹஜ்ஜுப் பெருநாள் அன்று (திங்கள் கிழமை) காலை 7:30 க்கு சுலேசுவரன்பட்டியிலும், 7:45 க்கு பொள்ளாச்சியிலும் நபி வழியில் திடல் தொழுகை நடைபெற்றது. 
தொடர் மழையாக இருந்த போதிலும், நபி வழியைப் பேணுவதற்காக திடல் தொழுகைக்கு ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.   அதைத் தொடர்ந்து பெருநாள் உரை மாவட்ட தாயி இத்ரீஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. 'தியாகங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். 

திடல் தொழுகை காட்சிகள் 





கூட்டுக்குர்பானி


இதைத்தொடர்ந்து  கூட்டுக்குர்பானி கொடுக்கப்பட்டது. வருடா வருடம் பொள்ளாச்சி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கூட்டுக்குர்பானி கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த வருடமும் ஜமாஅத் சார்பாக 3 மாடுகள் அறுக்கப்பட்டு, ஏழைகளுக்கு இறைச்சி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.