பித்ரா விநியோகம் விபரங்கள்

கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் பொள்ளாச்சி, சுலேசுவரன் பட்டி  கிளைகள்  இணைந்து, பெறப்பட்ட பித்ரா தொகையிலிருந்து ஏழை மக்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கும் பணி சிறப்பாக நடைப்பெற்றது.

கடந்த 30 /08 /2011  செவ்வாய் கிழமை  அன்று பொள்ளாச்சி  பகுதியில்  உள்ள சுமார் 285 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பணத்திலிருந்து மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதை தவிர மேலும்
20 குடும்பங்களுக்கு  அதிகாலையில் மட்டன் வழங்கவும் டோக்கன் வழங்கப்பட்டு, பெருநாள் அதிகாலை மட்டன் இறைச்சியும் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்ல்லாஹ். 

வழங்கப்பட்ட பித்ரா பொருட்கள் விபரம் ;

அரிசி     - 2 கிலோ
ஆயில் - 200 கிராம்
நெய்      -50 கிராம்
சேமியா-  ஒரு பக்கெட்
சர்க்கரை - 1/4 கிலோ
பட்டை, கிராம்பு, ஏலம் - ஒரு பாக்கெட்
முந்திரி, திராட்சை - ஒரு பாக்கெட்
தேங்காய் - ஒன்று

மேலும் சகோதரர் ஒருவர் வழங்கிய நிதியிலிருந்து 150 -நபர்களுக்கு லுங்கியும்  வழங்கப்பட்டது.

பித்ரா விநியோகம் தொடர்பான அனைத்து பணிகளிலும் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.